a sleeping woman in yellow outfit

ஆரோக்கிய வாழ்க்கையும் தூக்கமும்

black woman in pain on couch
Photo by Sora Shimazaki on Pexels.com

காலை 7 மணிக்கு மேல் தூங்கி எழுவதால் பல வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், தற்காலிகமான உடல் உபாதைகளில் இருந்து நாள்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.

DISCLAIMER: Please note that by viewing this website/video you agree with the best of your knowledge all the terms and conditions given in the disclaimer

ஒருவேளை நீங்கள் காலை 7 மணிக்கு மேல எழுந்திருப்பவர்களா அல்லது 7 மணி, 8 மணி, 9 மணி வரை தூங்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கலாம்.  இரவு நேரத்தில் தாமதமாக தூங்குவதும் தாமதமாக சாப்பிடுவதும் அதனால் காலையில் தாமதமாக எழுவதும் இப்படிப்பட்ட மாறுபட்ட நேரங்களில் நமக்கு உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக 7 அல்லது 8 மணிக்கு மேல் தூங்கி எழுவதால் புதிதாக பல நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் ஏற்கனவே உள்ள நோய்களும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எந்த வகையான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என்றும், அதே சமயத்துல இதை எப்படி தடுப்பது என்பதைக் குறித்து நாம் இப்பொழுது பார்க்கலாம்.

7 மணிக்கு மேல் தூங்கி எழுவதால் இரண்டு விதமான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. GERD என்கின்ற (Acid Reflux)

அப்படி என்றாள் நம் குடலில் உள்ள அமிலம் வந்து இரைப்பையிலிருந்து தொண்டைக்கு வருகிறபோது ஏற்படுகின்ற ஒருவகையான உணவு எதுக்களிப்பு நோய் இதனை gastroesophageal reflex disease என்று கூறுவர் இந்த வகையான நோய்கள் வருவதற்கு காலை தூங்கி எழும் நேரம், தூக்கமின்மை போன்றவை காரணமாக அமையும்.

இரண்டாவதாக (Esophagitis) என்று சொல்லக்கூடிய உணவுக்குழாய் புண் வருவதற்கு சாத்தியம் அதிகமாக உள்ளது.

எப்படியெனில் காலை 7 மணிக்கு நமது உடலில் உணவுகளை ஜீரணம் செய்வதற்காக ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சுரக்க ஆரம்பிக்கும் அதுமட்டுமல்லாது இரவு நேரங்களில் நாம் சாப்பிட்ட உணவை ஜீரணம் செய்ய அதிகமான ஆசிட்டுகள் சுரக்கும் இந்த ஆசிட்டுகள் நாம் படுத்திருக்கும் போது நமது உடலில் மிதந்த நிலையில் காணப்படும் அவை உணவுக்குழாயின் வாய்ப் பகுதியான நுழைவாயில் வழியாக வெளியேற முயற்சி செய்யும் அப்பொழுது மீண்டும் நமது உடலில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் சுரக்கும்போது அதிகமான அழுத்தம் ஏற்பட்டு அவைகள் உணவுக்குழாயின் வாய்ப்பகுதியில் மோதும்போது அவை சீக்கிரமாக பலவீனமாக வாய்ப்பு உள்ளது இதனால் நம் உடலில் அல்சர் போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது நாம் 7 மணிக்கு முன்னதாகவே

எழுந்திருக்கும்போது நம் உடல் படுத்த நிலையில் இல்லாமல் நேராக இருக்கும் நாம் ஏழு மணிக்கு முன்னாள் எழுந்து உணவுகளை சாப்பிட ஆரம்பிக்கும்போது அந்த ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உணவை ஜீரணம் செய்வதற்கான அடுத்த வேலையை துவங்கி விடும் இதனால் உணவுக்குழாயில் வால்வு பகுதி சேதமடையாமல் இருக்கும்.

இதுபோன்ற சீக்கிரம் எழுவதினால் பல வகையான நோய்களை நாம் தடுக்கலாம் அல்லது ஏழு மணி எட்டு மணி வரை நாம் தூங்கி கொண்டிருந்தாள் இந்த நோய் ஏற்கனவே இல்லாதவர்களுக்குக் கூட புதிதாக வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. அடுத்ததாக உணவு குழாய் புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

crop woman in pain on sofa
Photo by Sora Shimazaki on Pexels.com

நமது இரைப்பையின் தோல் சற்று கடினமாக இருக்கும் ஆனால் உணவுக்குழாயின் தோல் மிகவும் மிருதுவாக இருக்கும் இதனால் இரைப்பையில் இருக்கும் அமிலமானது உணவு குழாய்க்கு வரும்போது உணவுக் குழாயை சேதப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது, இவ்வகையான நோய்களை தடுக்க நாம் 7 மணிக்கு முன்னதாக எழுந்து விடுவது  நல்லது இதனால் நெஞ்சு, எரிச்சல் நெஞ்சு வலி, தொண்டை வலி, தொண்டை புண் , வாய்ப்புண், நாக்கு புண், போன்ற பிரச்சனைகளும் ஏற்படும் இவைகள் ஏற்பட காரணம் என்னவென்றால் ஹைட்ரோ குளோரிக் அமிலமானது இரைப்பையிலிருந்து உணவு குழாய்க்கு வர நாம் அனுமதிக்கிறோம் இதுவே அதன் காரணம்.

close up photography of woman sleeping
Photo by Andrea Piacquadio on Pexels.com

அடுத்ததாக ஏழு மணிக்கு மேல் தொடர்ந்து தூங்கி எழுந்து கொண்டே இருந்தால் ஏற்படக்கூடிய அடுத்த ஜீரண மண்டலநோய்என்னவென்றால் மலச்சிக்கல் பொதுவாக நம்முடைய மலகுடல் இயங்கும் நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரைதான் இந்த நேரத்தில் நாம் பொதுவாக எப்பொழுதும் மலம் கழிப்பதை தொடர்ந்து செய்வதினால் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் பொதுவாகவே உலகம் முழுவதும் உள்ள மக்கள் கழிவறையை பயன்படுத்தும் நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரைதான் என்று ஒரு சர்வே கூறுகிறது இதுதான் மலக்குடல் இயங்கும் நேரம்.

நாம் சரியான நேரத்தில் மலம் கழிக்காவிட்டால் மலகுடல் இயங்காது தாமதமாக நேரம் கழித்து 7 மணிக்கு மேல் 8 மணி 9 மணி போன்ற நேரம்வரை நான் தூங்கிக் கொண்டே இருந்தால் மலகுடல் இயங்கும் நேரத்தில் நம் மூளை உணர்வு அடையாமல் அந்த வேலை நிறுத்தப்படும் ஏழு மணிக்கு மேல் அது சரியாக வேலை செய்யாது அதன் இயக்கம் குறைவாக தான் இருக்கும் இதனால் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது, இந்த மலச்சிக்கல் தொடர்ந்து இருப்பதால் நாள்பட்ட நோய்களான மூலம் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.

woman apple iphone smartphone
Photo by cottonbro on Pexels.com

அல்லது இந்த கழிவை அப்படியே தேக்கி வைப்பதினால் மலக்குடல் புண் அல்லது

மலகுடல் அலர்ஜி நோய் ஏற்பட வாய்ப்புள்ளது இதனால்தான் நம் காலை கடனை காலையிலேயே முடித்துவிடவேண்டும் இதனால் காலை 6 மணிக்கு எழுவதை வழக்கமாக வைத்துக் கொள்வது நல்லது குடல் ஆரோக்கியம்தான் நம் உடலின் மொத்த ஆரோக்கியம் சீக்கிரம் எழுவோம் நம் உடலை காப்போம்.

Thank you

View My Latest Happy Posts

Leave a Comment

Your email address will not be published.