cinnamon and anise

Cinnamon மருத்துவ குணங்கள்

Cinnamon பட்டை மிக அதிகமான மருத்துவ குணம் உள்ளதாக நிறைய ஆய்வுகள் சொல்கின்றது எனவே இந்த Cinnamon பட்டை எப்படி பயன்படுத்துவது, இது எந்த மாதிரியான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது, மிக எளிய வடிவத்தில் நாம் எப்படி அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது, என்பதை பார்க்க போகிறோம். உலகம் முழுவதும் பயன்படுத்தக்கூடிய உணவு பொருள் மற்றும் மருத்துவ பொருள் எது என்றால், சின்னமொன் (cinnamon) என்று அழைக்கப்படக்கூடிய பட்டை. இது வெவ்வேறு வகையான வகைகள் மற்றும் ரகங்களைக் கொண்டுள்ளது. மேலும் எல்லா விதமான சினமொன் பட்டைகளுக்கும் மிக முக்கியமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. எனவே இந்த சினமொன் மீது நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ள தீர்வுகள் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

DISCLAIMER: Please note that by viewing this website/video you agree with the best of your knowledge all the terms and conditions given in the disclaimer

சினமொன் ரத்த சோகையை குறைக்குமா ?

1) இந்த சினமொன் என்று அழைக்கப்படக்கூடிய பட்டைக்கு cinnamon www.trendsin11thhour.comரத்த சர்க்கரையை குறைக்க கூடிய ஆற்றல் இருக்கிறது என்று ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது. நம்முடைய எச்பி அளவு என்று சொல்லக்கூடிய, மூன்று மாத ரத்த சர்க்கரையின் அளவை, அதாவது உபரி சர்க்கரையின் அளவை கணிசமாக குறைக்கிறது. 15 முதல் 20 சதவீதம் வரை நம்முடைய ரத்த அளவில் தாக்கத்தை இது கட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.

சினமொன் சிறுநீரக பிரச்சனையை சரி செய்யுமா?

2) இரண்டாவதாக யூரியா கிரியாட்டின் என்று சொல்லக்கூடிய நம்முடைய சிறுநீரகத்தின் வழியாக வெளியேற கூடிய கழிவினை ரத்தத்திலும் மற்றும் சிறுநீரகத்திலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதில் இந்தப் சினமொன் பட்டையானது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு அவ்வகையான ஆற்றல் இருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கிறது.

ஜீரண பிரச்சனை சரி செய்வது எப்படி

3) மூன்றாவது சினமொன் பட்டையின் ஆற்றல் என்னவென்றால், இந்த சினமொன் பட்டையானது ஜீரண மண்டலத்தை தூண்டக்கூடிய நல்ல ஜீரண பொருளாக பயன்படுகிறது (good digestive) ஆக செயல்படுகிறது. cinnamon www.trendsin11thhour.com ஜீரண மண்டலத்தில் ஆற்றலை அதிகரிக்கும் சக்தி அதற்கு உள்ளது. எனவேதான் இந்தியா போன்ற நாடுகளில் சினமொன் பட்டை மற்றும் குங்குமப்பூ போட்டு பாலில் கலந்து குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கின்றனர். குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு (டைஜஸ்டிவ் பிராப்ளம்) இருக்கக்கூடிய குழந்தைகளுக்குகூட இவற்றை அரைத்து தண்ணீரில் குழைத்து நாக்கில் தடவுவது போன்ற செயல்களை செய்கின்றனர். இது ஒரு நல்ல ஜீரண ஊக்கியாக பயன்படுகிறது என்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

சரும பராமரிப்பு மூலிகைdouble exposure, miss kabylia 2017, beauty-2014972.jpg

இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நம்முடைய இரத்தத்தில் இருக்கக்கூடிய அன்ட்டிஆக்சிடென்ட் என்று சொல்லக்கூடிய ரத்தத்தில் உள்ள இறந்த செல்கள் ஃப்ரீராடிகல்ஸ் என்று சொல்லக்கூடிய, இறந்த செல்களை நீக்குவதிலும், நம்முடைய சரும பராமரிப்பு மற்றும் ஆயுட் காலத்தை அதிகரிப்பதிலும், சினமொன் பட்டைக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு உள்ளது என்பது. ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

கொழுப்பை எவ்வாறு குறைப்பது?man, fat, overweight-5665004.jpg

இன்னும் நிறைய மருத்துவ குணங்கள் சினமொன் பட்டைக்கு உள்ளது. நம்முடைய ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க கூடிய, மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ளும் போது, அதில் உள்ள கொழுப்புகளை கரைத்து, அதில் உள்ள ஜீரணத்தை மேம்படுத்தக்கூடிய முக்கிய பங்கு சினமொன் பட்டைக்கு உள்ளது. கொலஸ்ட்ரால் மெட்டபாலிசம் அதாவது கொழுப்பு கரையும் நிலை, கொழுப்பு ஜீரணமாகும் நிலை, அதாவது ஜீரணமாகும் சுழற்சியை நிறைவேற்றுவதற்கு சினமொன் பட்டையானது முக்கிய பங்கு வகிக்கிறது. இவை எல்லாம் சினமொன் பட்டையின் மருத்துவ குணநலன்கள்.

நுரையீரல் ஆரோக்கியமாக வைப்பது எப்படி

மேலும் சினமொன் பட்டை respiratory system, என்று சொல்லக்கூடிய நம்முடைய சுவாச மண்டலத்தில் ஏற்படுகிற பிரச்சனையை சரி செய்கிறது. நம்முடைய சுவாச மண்டலத்தில் உள்ள சுவாசப் பாதை சுருங்குதல், ஆஸ்துமா மற்றும் அலர்ஜி போன்றவை மற்றும் அடிக்கடி மூச்சு திணறல் போன்ற வகையான நோய்களுக்கு, இந்தப் சினமொன் பட்டையை ஒரு கணிசமான அளவில் தினமும் எடுத்துக்கொண்டு வந்தால், நுரையீரல் பிரச்சனைகள் பெருமளவில் குறைகிறது. எனவே சினமொன் பட்டையை பாலில் கலந்து அருந்துவதால் இவ் வகையான நோய்களில் இருந்து விடுபடலாம் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.

சினமொன் பட்டையை எப்படி பயன்படுத்துவது:

சினமொன் பட்டை என்பது ஒரு மசாலா பொருள். காரமான, வலுவான கடுமையான சுவை வாய்ந்தது. எனவே இதைப் பயன்படுத்தும்போது, மிகக் குறைந்த அளவிலேயே நாம் பயன்படுத்துவது நல்லது. நாம் சினமொன் பட்டையை சமையலில் பயன்படுத்துவது என்பது வேறு. மருத்துவத்திற்காக நேரடியாக உட்கொள்வது என்பது வேறு. சமையலில் பயன்படுத்தும்போது நாம் மற்ற உணவுப் பொருட்களோடு சேர்ந்து உண்கிறோம், ஆனால் நேரடியாக மருந்தாக இதை நாம் உட்கொள்ளும் போது, மிக சிறிய அளவிலேயே பயன்படுத்த வேண்டும். இதை அரைத்து பொடி செய்து ஒரு மிளகு அளவு மட்டும் பயன்படுத்தினால் போதும். காலை, மாலை, இரண்டு வேலையிலும் ஒரு மிளகு அளவு மட்டும், அதாவது ஒரு கால் ஸ்பூன் மட்டும் பாலில் கலந்து உட்கொள்ளலாம். இதனை உணவுக்கு பின் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது ஒருவகையான எரிச்சலை உண்டு பண்ணும் வாய்ப்பு உள்ளது, அல்லது ஏற்கனவே அல்சர் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இதனை வெறும் வயிற்றில் எடுப்பதினால் மேலும் அல்சர் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே மிகவும் சிறிதளவு உணவுக்குப் பின்பு எடுத்துக் கொள்வது நல்லது.

தேன் மருத்துவ குணங்கள்honey, cinnamon, bowl-2542952.jpg

அடுத்தது, சினமொன் பட்டையை நாம் சிறுசிறு மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்ளலாம், அதாவது சினமொன் பட்டையை நன்கு பொடி செய்து, அதனை வெந்நீரில் கலந்து, தேன் கலந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அதனை ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொண்டு வரலாம். தொடர்ந்து ஒரு பதினைந்து நாள் எடுத்துக் கொள்வது நல்லது. சினமொன் பட்டையை தேனோடு கலந்து சாப்பிடலாம், ஜீரண பிரச்சனை உள்ளவர்கள், தேன் மற்றும் சினமொன் பட்டையை கலந்து சாப்பிடும்போது அதிலுள்ள காரமான தன்மை நம்மை அதிகமாக பாதிக்காமல் பார்த்துக் கொள்ளும். எனவே சினமொன் பட்டையுடன் தேன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. பொதுவாகவே பாரம்பரிய மருத்துவமுறையில் சினமொன் பட்டை மற்றும் தேன் அதிக பங்கு வகிக்கிறது. சளி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் சினமொன் பட்டை மற்றும் தேன் கலந்து உட்கொள்ளும்போது, உடனடியாக சளி பிரச்சனை நீங்குவதை நாம் காணலாம். சினமொன் பட்டை மற்றும் தேன் கலந்து சாப்பிடுவதினால் உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் என்று சொல்ல கூடிய கொழுப்பு அதிகமான அளவில் கரையும். எனவே இதனை பயன்படுத்தும் போது ஒன்று முதல் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும் இவ்வாறாகப் சினமொன் பட்டையைப் பயன்படுத்தி பலனடையுங்கள்.

படித்து பயனடையுங்கள்:

சினமொன் பட்டையைக் குறித்து நீங்கள் இன்னும் அதிக படிக்க விரும்பினால் எனக்கு பிடித்த சில புத்தகங்களை கீழே தருகிறேன் படித்து பயனடையுங்கள்:

சினமொன் பட்டையை நீங்கள் ஆன்லைனில் வாங்க விரும்பினால் இந்த லிங்கை பயன்படுத்துங்கள்

https://amzn.to/35LGEqH

. https://amzn.to/35LGEqH

Leave a Comment

Your email address will not be published.