Shoppingin11thhour, E-Shop
ரின் சமாதான் திட்டம் 2021-22

ரின்-சமாதான் திட்டம் 2021-22

SBI வங்கியில் கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாதவர்களுக்கு ஒருமுறை சலுகை திட்டத்தில் கடனை திரும்பச் செலுத்துவது. இந்த ரின் சமாதான் திட்டத்தின் கீழ் வங்கிக்கு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகையில் 15 % இருந்து 30 % வரையிலும் தள்ளுபடி செய்து மீதமுள்ள தொகையை கடனுக்கு செலுத்தி கடனை முடித்துக் கொள்ளலாம், இந்தச் சலுகை ரூபாய்.20 லட்சம் வரை கடன் பாக்கி உள்ள வியாபார கடன், தனிநபர் கடன், விவசாய  கடன்களுக்கு பொருந்தும் .

இந்த கட்டுரையை வீடியோவாக பார்க்க கீழே உள்ள வீடியோ லிங்கை கிளிக் செய்யுங்கள்man, pointing, blank-4370516.jpg

SBI RINNSAMADHAN 2021-22 OTS | ரின் சமாதான் திட்டம் 2021முழுவிபரம்

இந்த கட்டுரையை வீடியோவாக பார்க்கpointing, up, woman

முதலாவது ரின் சமாதான் திட்டம் என்றால் என்ன?,

இது எதற்காக கொண்டு வரப்பட்டது?, என்பதை புரிந்து கொள்வோம்.

SBI வங்கியில் கடன் வாங்கி அந்த கடனை திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்படும் வாடிக்கையாளர்களுக்காக இந்தச் சலுகையை வங்கி அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டம் 31 டிசம்பர் 2021 வரை மட்டும்.

எந்த கடன்களுக்கு இந்த ரின் சமாதான் திட்டத்தின் கீழ் சலுகை கிடைக்கும்?

1  )  சிறு ,குறு , பெரிய விவசாய கடன்கள்

2  )  கல்விக் கடன்

3  )  பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்

4  )  வியாபார கடன்கள்

5  )  வீட்டுக் கடன்

குறிப்பு : உங்கள் கடன் தொகை பாக்கி 20 லட்சத்துக்கு உள் இருக்க வேண்டும்.

நீங்கள் வாங்கிய கடன் நீண்ட காலமாக வாராக்கடன் பட்டியலில் இருக்க வேண்டும் உங்கள் கடன் வாராக் கடனாக உள்ளதா இல்லையா என்பதை வங்கிக்கு சென்று கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

ரின் சமாதான் என்ற இந்தத் திட்டத்தில் என்ன சலுகைகள் கிடைக்கும்?

உங்கள் கடனில் உள்ள வட்டித் தொகை முழுவதையும் தள்ளுபடி செய்யப்படும்.

இதற்கும் மேலாக 15% முதல் 30 % வரை மேலும் கூடுதலாக தள்ளுபடியும் கிடைக்கும் இந்தக் கூடுதல் தள்ளுபடி ஒவ்வொரு கடனுக்கும் மாறுபடும் ஒவ்வொரு தனி நபருக்கும் மாறுபடும்.

ஏனென்றால் ஒவ்வொருவரும் கடன்வாங்கி திருப்பிச் செலுத்தும் தவணை கால அளவு மாறுபடும் அதுமட்டுமின்றி கடன் திட்டங்கள் கடன் பெறும் பொழுது இருக்கும் சலுகைகள் மற்றும் பல ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளின் கீழ் கடன் சலுகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் எனவே உடனே நீங்கள் கடன் வாங்கிய வங்கிக் கிளை மேலாளரை அணுகி எவ்வளவு சலுகை உங்களுக்கு கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு . இந்த அரிய சலுகையை உடனே பெற்றுக் கொள்ளுங்கள்.

ரின் சமாதான் தொகையை எப்படி செலுத்துவது?

இந்த ரின் சமாதான் திட்டத்தில் கடனில் தள்ளுபடி போக மீதமுள்ள தொகையை எப்படி செலுத்துவது என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படும் அதைக்குறித்து கீழே பார்க்கலாம்.

இந்தத் திட்டத்தில் இணைவதற்கு உங்கள் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான் கார்டு, போன்றவற்றின் நகலையும் விண்ணப்ப படிவத்துடன் சேர்த்து வைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்துடன் நீங்கள் செலுத்தவேண்டிய தொகையில் 10% தொகையை விண்ணப்பம் கொடுத்த அன்றே செலுத்தவேண்டும் அப்பொழுதுதான் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பித்த திலிருந்து 30 நாட்களுக்குள் மீதமுள்ள தொகையில் 10%  தொகையை செலுத்த வேண்டும்.

விண்ணப்பித்த அதில் இருந்து 60 நாட்களுக்குள் மீதமுள்ள தொகையில் 10% செலுத்த வேண்டும்.

விண்ணப்ப தேதியிலிருந்து நான்கு மாதத்திற்குள் முழு தொகையையும் செலுத்தினால் விண்ணப்ப தேதியிலிருந்து நீங்கள் கடனைத் திரும்பச் செலுத்தும் தேதி வரையில் எந்த வட்டியும் இல்லை. அதாவது நான்கு மாதத்திற்குள் செலுத்துபவர்களுக்கு அந்த நான்கு மாதத்திற்கான வட்டி விலக்கு செய்யப்படுகிறது.

உங்களால் 4 மாதத்திற்கு உள்ளாக ரின் சமாதான் திட்டத்தில் வட்டி தள்ளுபடி போக மீதமுள்ள கடன் தொகையை திரும்ப செலுத்த இயலாவிட்டால். ரின் சமாதானம் திட்டத்தில் விண்ணப்பித்த தேதியில் இருந்து ஆறு மாதத்திற்குள் திரும்ப செலுத்தலாம் ஆனால் அந்த 6 மாதத்திற்கான வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும்.

சென்ற ஆண்டும் இதே போன்ற ஒரு ரிங் சமாதான் திட்டத்தை வங்கி அறிமுகம் செய்திருந்தது அந்த திட்டத்தின் கீழ் சலுகை பெறும் தகுதியை உடையவராக இருந்தும் கடனை திரும்ப செலுத்த முடியாதவர்கள்,  இந்தத் திட்டத்தில் இணைந்து சலுகை பெற்று கடனை முடிக்கலாம்.

இதற்கு முன்பு கடனில் செலுத்திய எந்த தொகையும் திரும்ப தரப்படமாட்டாது.

சிறப்பு சலுகை:

31 டிசம்பர் 2021 க்கு முன்பாக முழு தொகையையும் திரும்ப செலுத்துபவர்களுக்கு ரின் சமாதான திட்டத்தின் கீழ் வரும் தொகையில் மேலும் 10% தொகையை வங்கி தள்ளுபடி செய்யும்.

மற்றுமொரு கூடுதல் சலுகையும் உள்ளது.

இந்த சலுகை அனைவருக்கும் அல்ல.

அடமானம் இல்லாமல் சிறிய அளவிலான கடன்கள், நீண்டகாலமாக வாராக்கடனாக உள்ள கடன்களுக்கு மட்டும் இந்த சலுகை.

விவசாய, வியாபார, கல்விக் கடன்களுக்கு இது பொருந்தும். ஆனால், கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

1) சிறிய அளவிலான கடனாக இருக்க வேண்டும்

2) அடமானம் இல்லாத கடனாக இருக்க வேண்டும்

3) உங்கள் கடன் நீண்ட காலமாக குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு மேல் வாராக் கடனாக இருக்க வேண்டும்

இந்த மூன்று நிபந்தனைகளுக்கும் உங்கள் கடன் உட்பட்டிருந்தால் மட்டும்.

50% வரை தள்ளுபடி கிடைக்கும்,

நினைவிருக்கட்டும் இது அனைத்து கடன்களுக்கும் பொருந்தாது.

இந்தக் கட்டுரையை காணொளியாக

hand, finger, pointing-1464838.jpg youtube, Share Market Guesstimate(Youtube) hand, finger pointing, pointing-1923005.jpgசேனலிலும் தந்துள்ளேன் அதையும் பார்க்க மறவாதீர்கள்.

உங்களுக்கு இந்த ரின் சமாதான் திட்டத்தை குறித்த மேலும் சந்தேகங்கள் ஏதாகிலும் இருக்குமானால் வலைதளம் (WEBSITE) மற்றும் யூடியூப் (Youtube) சேனலில் உங்கள் கேள்விகளை கேட்கலாம்.

Leave a Reply

Shopping cart

0
Buyers Please Chat on WhatsApp(8754791415). Use Coupon code for offer 10% to 50% on MRP. Cart on Maintenance
image/svg+xml

No products in the cart.

Continue Shopping