சுத்தமான நெய் உங்கள் வீட்டில் நீங்களே தயாரிக்கும் முறை

How to make Ghee easily at home? step by step Method with video பசும்பால் நெய் நீங்களே வீட்டில் சுத்தமான நெய்யை சுலபமாக தயாரிக்கலாம்

DISCLAIMER: Please note that by viewing this website/video you agree with the best of your knowledge all the terms and conditions given in the disclaimer

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆரோக்கியமான பொருட்களில் ஒன்றுதான் நெய்.

நெய் என்றாலே நமக்கு ஞாபகத்தில் வருவது இனிப்பு பலகாரங்கள் தான் ஆனால், நெய்யில் இருந்து நாம் இனிப்பு தயாரிப்பது மட்டும் அல்லாமல் அன்றாட உணவில் சிறிது நெய் சேர்த்து உண்பது நல்லது.

PreviousNext

 நெய் என்பது உணவுப் பொருட்களின் முதன்மையான இடத்தை வகிக்கிறது.

எந்த ஒரு உணவு பரிமாறும் போதும் பாரம்பரியமாக நெய் ஊற்றி பரிமாறுவது நம் தமிழக பண்பாடு ஆகும்.

நெய் உணவிற்கு மணம் கொடுக்கிறது மாத்திரமல்லாமல் உணவிற்கு சுவையையும் கூட்டுகிறது.

 மணம் சுவை மட்டுமல்லாமல் நம் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக் கூடியதும் நெய் ஆகும்.

பொதுவாகவே நெய் நம் உணவில் சேர்த்து சாப்பிடும்போது நமக்கு ஆரோக்கியம் மற்றும் ருசியும் கூடுகிறது.

PreviousNext

குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இது பல நன்மைகளை அளிக்கிறது.

மூட்டு வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் நெய்யை தினமும் உணவின் சிறிதளவு சேர்த்துக் கொண்டு வந்தால் மூட்டு வலி பிரச்சனை முற்றிலுமாக நீங்கிவிடும்.

இது கொழுப்பு சத்து உள்ளது என்று அனேகர் எடுத்துக்கொள்ள தயங்குகின்றனர், ஆனால் அப்படி அல்ல தினமும் சிறிதளவு நெய் சேர்த்துக் கொண்டு வந்தால் நம் உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும் இதனால் எந்தவித கொழுப்பும் சேர்வதில்லை.

நெய்யை உணவில் சேர்ப்பதனால் உணவிலுள்ள காரத்தன்மை மட்டுப்படுத்தப்படுகிறது.

இதனால் அல்சர் போன்ற வியாதிகள் வராமல் தடுக்கலாம். 

சரி நெயில் இத்தனை நன்மைகள் உள்ளனவா இதை நாம் கடையில் சென்று வாங்க வேண்டாம் நாமே வீட்டிலேயே தயாரிக்கலாம் நம் வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே ஈசியாக நாமே தயாரிக்கலாம்.

இதை எப்படி தயாரிக்கிறது பார்க்கலாம் வாங்க

நாம் தினமும் பால் வாங்கி காபி போட்டு குடிக்கிறோம்.

நாம் தினம் வாங்கும் பாலில் காய்ச்சும்போது,பாலின் மேலே ஏடு இருக்கும் இதை ஆடை என்றும் கூறுவர். பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கும் போது அதன்மேல் ஏடு படிந்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

பாலில் தினமும் படியும் ஆடையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஒரு டப்பாவில் சேர்த்து குளிர்சாதன பெட்டியில் ஃப்ரீசரில் வைத்து வைக்கவும்.

ஓரளவிற்கு பாக்ஸ் ஃபுல்லா வந்ததும் ஒரு நான்கைந்து நாளிலேயே இல்லனா ஒரு வாரம் இந்த மாதிரி நாம சேர்த்து வைக்கணும்.

 

 ஃப்ரீசரில் இருந்து எடுத்து ஒரு ரெண்டு மூணு மணி நேரம் வெளிய வச்சு ரூம் டெம்பரேச்சர் வந்தபிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து லேசா அரைக்கணும்.

 ரெண்டு மூணு நிமிஷம் நம்ம மிக்ஸியில் போட்ட பிறகு வெண்ணை மற்றும் மோர் தனித்தனியாக பிரிந்து வந்துவிடும்.

 ஒரு பாத்திரத்தில் வெண்ணையை மாத்திரம் தனியாக எடுத்து அதனை ஐஸ் க்யூப் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக அலசி வெண்ணையை மாத்திரம் தனியாக பிரித்து எடுக்க வேண்டும். இது ரொம்ப ஈசியாக இருக்கும்.

பிறகு அந்த வெண்ணையை அடுப்பில் வைத்து லேசான தணலில் சூடு பண்ண வேண்டும். வெண்ணை நன்றாக கரைந்து விடும்.

அடிக்கடி கொஞ்சம் கிளறி கொடுக்க வேண்டும். வெண்ணை கொதிக்கும்போது நுரை வரும்.

 அந்த நுரை நன்றாக அடங்கின பிற்பாடு லேசாக இளம் சிவப்பு நிறமாக மாறும், நல்ல வாசனை வரும், நல்லா தேன் மாதிரி கலர் வரும்போது ஆஃப் பண்ணிட்டு கீழே இறக்கி வைக்கவும்.

கொதிக்கும்போது சடசடவென சத்தம் குறைந்து லேசா கொதிக்கும்போது நல்லெண்ண மாதிரி கலர்ல மாறிடும். நல்லா நெய் மனமும் வரும். இந்த நேரத்துல நம்ம அடுப்பை ஆப் பண்ணிடலாம்.

இது ஒரு பாத்திரத்துல வடிகட்டி ஆற வைத்தாள் நல்ல மணல் மணலான, சூப்பரான, வாசமான, ஆரோக்கியமான நெய்யை நாம் வீட்டிலேயே தயாரித்து விடலாம். இது ரொம்ப நல்லா இருக்கும் சுத்தமான ஒரிஜினல் நெய் இப்படிதான் வாசமா இருக்கும் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

PreviousNext

இது பசும்பாலில் மட்டும்தான் செய்யமுடியும். பாக்கெட் பாலில் எல்லாவித கொழுப்புச் சத்தையும் எடுத்துவிடுகிறார்கள். பசும்பால் தான் முழுமையான ஆரோக்கியம் தரும், பசும்பால் தான் நமக்கு அப்படியே கிடைக்கும் எனவே பசும்பாலில் மாத்திரம் வெண்ணை எடுத்து நெய் தயாரிக்கவும் அதுதான் நமக்கு ஆரோக்கியமும் கூட.

 

 

 

Leave a Comment

Your email address will not be published.